புத்தொளியாய்...அனுதினமும்..
வான் கடந்து விழும்..பேரொளி...
ஜீவனைத்தடவும் மின்னொளி...
பூமியைத் தழுவும் தண்ணொளி..
இலைக்கும் ஊட்டும் கதிரொளி..
உயிர்க்கும் ஊட்டும் பண்ணொளி
மலைகளை அணைக்கும் பட்டொளி
மேகத்தை துரத்தும் வெண்ணொளி..
கடலைத் துளைக்கும் வீச்சொளி...
காற்றும்.. ஒளியும் மென்னொளி..
ப்ரஹ்மாண்டமிது ஆளுமொளி
பரப்ரஹ்மம் இது..பாயுமொளி
பரம்பொருள் இது சூரியஒளி
உலகையாளுது..உயிரொளி
ஒளிகடந்த இப்புவியை.. விழி இழந்த குருடனாய்
தடுமாறி சுற்ற வைக்கும்...காணாஒளி
ஒளியில்லா உலகம் விழியில்லா முகமாக
சூனியத்தை கக்கிவிடும்..பரந்தவெளி!
============================== ===================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக