சனி, 7 ஏப்ரல், 2012

மணம் ...தாங்கும்... பூக்கூடை ..!

மணம் ...தாங்கும்... பூக்கூடை ..!
ஹைக்கூ கவிதைகள்: ஜெயஸ்ரீ ஷங்கர்.
நன்றி: திண்ணை.





மணம் கரைந்து….
உலர்ந்து உதிர்ந்தது …
செடியில்…பறிக்காத
மல்லிகை..!
——————————————
சாமந்தி….முகத்தில்…சந்தோஷம்..
மணத்தாலும்…விதவை தானே…
மல்லிகை…!
—————————————–
இரும்பென…. கருவண்டு..
காந்தமாக… மகரந்தம்….
பாவம்….தாமரை…!
———————————————
சேற்றில் நான்…!
வேலியாய்..நீ ..!
நான் மட்டும் பூஜைக்கு..!
தாமரை..!
————————————————
பூக்காட்டில் பாம்பு…!
நெருங்க மறுக்கும் அவள்…
கருநாக… ஜடையில்
என் நர்த்தனம்..!
தாழம்பூ..!
———————————————
ஈராறு ஆண்டுகளாய்…
காத்திருந்தது… தென்றல்… !
முதல் குறிஞ்சியின்…
வாசம் பிடித்து
தூது சொல்ல..!
————————————————
மழை கரைக்காமல்
குடை கொண்டு
மகரந்தம்…..காக்கிறது
நாகலிங்கம்…!
————————————————
சந்திரனைத்
திருடிக் கொள்ள
கண் திறக்கும்..
குளத்து அல்லி..!
————————————————-
வண்ண இதழில்லாமல்..
மகரந்தம் தாங்காமல்..
நானும் மலர்ஜாதி…
சாதித்தது.. மரிக்கொழுந்து..!
———————————————
நிறங்களில்…
ஏதுமில்லை..
வருந்தியது..
காகிதப்பூ..!
————————————–
ஆதவனைச்…
சரணடைந்ததால்…
கோவிலுக்குள்….
அனுமதியில்லை…
சூரியகாந்தி..!
——————————————–
இங்கும்..சிகப்பு விளக்கு…
தென்றலோடு…களிக்க…
இரவில் மலர்ந்து மணம்
வீசி அழைத்த மலர்….
இரவு ராணி..!
——————————————–
தத்துவம் சொல்லி
ஐந்து விரல் விரித்து…
உன்னதத் மகரத்
தண்டை..உயர்த்தியது…
செம்பருத்தி..!
———————————————–
மனம்.. மகிழும் நேரம்…
இதழ் விரித்து..சிரிக்கும்
நகைக்கும்… அணியாய்…
மணக்கும் மகிழம்பூ..!
———————————————–
முள்வேலி தாண்டி
நூல்வேலி தேடும்..
பட்டு ரோஜா..!
———————————————–
அன்றவள் வீசிய பூங்கொத்தில்..
அன்றலர்ந்த மலராய்…
சருகுகளிடையே….
வாடாமல்லி..!
—————————————————
பச்சைக்கடலுள்
நீல சிப்பிகள்…
வெண்சங்குகள்…
சங்குபுஷ்பங்கள்..!
—————————————————
மலர்களுக்குள்
நித்தம் தர்க்கம்..
யாரவள்…?
செந்தூரப்பூ…!
—————————————————–
மலர் நான் புனிதமே..
விதையில்.. ஏனோ…விஷம்..
அரளிபூக்கள்..!
———————————————–
நித்தம்… பூமிக்கு ..
சேலை…விரிக்கும்..
பவழமல்லி..!
———————————————–
என்னைப்போல்..
தூய்மையா?
உன்னிதயம்..!
நந்தியாவட்டை..!
———————————————-
நிறைகுடமாக..!
அரும்பி… மலர்ந்ததும்
ராஜவீதியில்..
ஜாதிமல்லி..!
——————————————
வெட்கத்தில்..
கன்னம் சிவந்தாள்…
பூத்தது…
குங்குமபூ..!
—————————————
அடர்வனத்துப்
புதையலோ…
பொன்மலர்
செண்பகப்பூ..!
——————————————
கார்மேகம் ..கலைந்தாலும்
மரம் சொரியும் பூ மழை..!
வீதியெங்கும் விரித்து
மணக்கும்..வெள்ளைமழை..!
————————————————
மலர்களின்..
வானவில்….
தேன்மலர்…!
————————————————–
பூக்களைப் பறிக்காதே…
ஏய்….பட்டாம்பூச்சி…!
எங்கே பாக்கற..?
உன்னைத்தான்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக