சனி, 7 ஏப்ரல், 2012

தென்றலின்..போர்க்கொடி...



தென்றலின்... போர்க்கொடி...!
கவிதை: ஜெயஸ்ரீ ஷங்கர்.
நன்றி: திண்ணை.





பொற்கொடியாய்…
நினைவில் நின்ற தென்றல்…
இன்று….தானே.…புயலாய் மாறி….
உயர்த்தியது  போர்க்கொடி…! உன்
ஆனந்தத் தாண்டவத்தில்….!
உன்னோடு சேர்ந்து
உன்னை எதிர்த்து…
தலைவிரித்தாடி…
கைமுறித்தது…தென்னை…
முக்கி முனகி ஆடும்போதே…
ஒடிந்து விழுந்தது முருங்கை…
சளைக்காமல் ஆடியும்…
முடிவில் பல கிளைகளைத்
தவறவிட்டது அரசு..!
தண்டோடு மடங்கியது
வாழைக் கூட்டம்…
தோற்று… வேரோடு
படுத்தது வேம்பு…!
வீதியெங்கும் மரங்களின்
மறியல் போராட்டம்…!
சூறைக் காற்றின்
அகோர சுவடுகள்…!
நகர்வலம் வந்து..
கடல்கடந்தது… தானே…
தென்றல்….!!
அல்ல…. அல்ல..புயல்…!
ஆடிக் களைத்து வலியில்
அழுதன மரங்கள்..!
மரணத்தின் பிடிக்குள்…
சிறகுகள் ஒடுங்கி…
புதுங்கித் தவித்தன கிளிகள்..!
பூமி இங்கே தேவையில்லை…
தட்டிடுவோமா…!!!
புயலும் மழையும்
சேர்ந்துபோட்ட..கும்மாளம்…
வெட்டவெளியில் பூகம்பம்…!
இயற்கை தந்த சீற்றம்…
நிலத்தை நீர் கொண்டு
உழுதது…! அழுதது..!
இயற்க்கைக்கு முன்னால்
இறைவன் கண்மூடி…
 மௌனம் காக்க…
தவறுக்கு மன்னியுங்கள்
என மண்டியிட்டது…..
கார்மேகம்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக