புதன், 11 ஏப்ரல், 2012

மணக்கும் மனம்...!

   


அம்மா...பூ ..!
வாங்கிக்கோங்க...
பார்வை குரலுக்குத்
தோதாக....பின்னணி
சேர்த்துக் கெஞ்சியது..

கை முழம் நீட்டி
மலர் அளந்தும்..
மேற்கொண்டும்....
நீட்டிப் போனது
முழங்கை....சரத்தோடு..!

போதும் போதும்...
ஒரு முழம்..போதும்..!
அவசர வார்த்தைகள்...
முந்திரிகொட்டையாக..
முன் வந்து நிற்க....

அளந்து கொடுக்காமல்....
வாழ்த்தோடு....
அள்ளிக் கொடுத்த...
மகராசி.....பூக்காரி..!
முகம் முழுக்க
கதம்ப சிரிப்பு....!

குளிர்ந்த மனசோடு...
இந்தக் காலத்தில்....
இப்படி....எப்படி..??
உள்ளத்து வினாவோடு
நான் நகர......!

புண்ணியம் செய்தவளாய்...
யாருக்கும் தெரியாமல்
ஆனந்தக் கண்ணீரை...
முந்தானையால்
துடைதெடுத்தாள்...

இளம் விதவையவள்..!
பூக்கூடையில்
இருந்து கனத்தது .....
அவளது...மனவாசம்...!

--------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக