ஜன்னலோர பிரயாணம்…
துணைக்கு வருகிறதாம்…
அடம்பிடிக்கிறது மழை..!
இயற்கை..!
——————————————————
கொன்றவர்களாலும்
தின்றவர்களாலும்
நிறைந்திருக்கிறது
உலகம்..!
மாறுமோ மனம்..!
——————————————————
நசுக்கிக் கொன்ற
குருதித் தடத்தின் மீது தான்
சக்கரங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன…
வாழ்க்கை..
———————————————————-
விரும்பும் வகையிலெல்லாம்..
விரும்பிய வண்ணத்தில்
பூக்கள் மலர்வதில்லை…
நிராசை..!
——————————————————-
இறந்தகால ஞாபகங்கள்
படிந்திருக்கும் துண்டுப் பொருட்கள்
நிகழ்காலத்தை
நடத்திச் செல்கிறது…!
நினைவுகள்..!
——————————————————
உறவில் சொந்தம்
இறந்ததாய்…..
துக்கம் அனுஷ்டித்தார்…அம்மா…!
ஓ..!..தீபாவளி வருகிறதா?!..
ஏழ்மை…!
——————————————————————
உலகமே உறைந்து போயிற்று
இறுதியாய் கண்ட காட்சிகள்
பார்வை போன கண்கள்..!
இருண்ட மனம்..!
—————————————————–
மீண்டும் துளிர்க்கிறது..
நம்பிக்கையோடு புதருள்
புதிதாய் புல்..!
கோடைமழை..!
—————————————————————-
வேதனையை வேடிக்கைபார்க்கும்
கண்களுக்கெல்லாம்..விருந்திட்டு..
கருணை சில்லறையை….
பொறுக்கும்..கழைக்கூத்தாடி…
வலிகள்..!
———————————————————————-
மழைவரும்போதேல்லாம்
எங்களுக்குள் சண்டை வரும்…
ஓடு ஒழுகும் இடங்களில் முதலில்
பாத்திரம் யார் வைப்பது..?
மகிழ்ச்சி…!
———————————————————————
சின்ன அறையில் இரவின் பிடியில்
தாயின் மடியில் தூக்கம் பிடிக்க
அம்மா சொல்வாள் ராஜாக்கதை…!
பெருமை…!!
————————————————————–
தந்தை எழுதிய கனவுப் புத்தகங்களும்
வெள்ளிகொப்பைகளும்…கேடையங்களும்…
யார் அனுமதியும் பெறாமலேயே…..
குழந்தைகளின் பசிபோக்க..
எடைகற்களுக்குத் தீனியானது…!
வறுமை….!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக