வியாழன், 26 ஏப்ரல், 2012

கவசம்...தேவை..!

 



பார்த்ததை  எல்லாம் வாங்கச் சொல்லி 
அழுது  அடம்பிடிக்கும் பெண்ணின் 
கண்ணுக்கொரு கவசம் தேவை...!

படிக்கும் வயதில் வெள்ளித்திரை 
நாயகனை கனவுகண்டு.பயம்காட்டும்
மகனின் மனதுக்கு கவசம் தேவை..!

கைபேசியில் கண்ணை நுழைத்து
எதையோ தேடித்தவிக்கும் சொந்தத்தின் 
குறுஞ்செய்தி பெட்டிக்கும்..கவசம் தேவை..!

வீட்டுக்குள் சுவர்கோழியாய்..பதுங்கிக் 
கிடந்தாலும்...கனவில் மிதக்கும் இதயத்திற்கு
அவசரமாய் அனைவருக்கும்...கவசம் தேவை..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக