புதன், 11 ஏப்ரல், 2012

காணாமல் போனவள்....!


பாலைவனப்
பிரயாணத்தில்
பாதை தடுமாற்றமா...?
விக்கிரகம் ஆகாத
கல்லுக்கு இங்கு ....
கோவிலா?


நினைவு மரத்தடியில்
என் கனவு தவம்..!
எத்தனை வார்த்தைகள்
கவிதைகளுக்கு ஓடி வர
ஏனோ விலக்கி ..
திருப்பி அனுப்புகிறேன்..
இதல்ல உங்கள் இடம்...!
 

கோபுரம் இல்லாமலே
கல்லுக்கு என் கண்ணீர்
அபிஷேகம்..!
புயலடித்து மணலால்
சாமரம் வீசி செல்கிறது..
சாரல்...கண்ணீரோடு..!
 

வானவில்..வர்ணம்
இருப்பதை சொல்லித்
தொழுகிறது....அதோ...!
இதயத்தை விட்டு
கால் முளைத்து
இறங்கிச் சென்ற...
அவளை....அழுத்தக்காரி ....!
 

காதலை....!
எந்த இடத்தில்.....
கண்டெடுப்பேன்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக