தீர்க்குமா...
தாகத்தை..
விரிந்த கடல்?
----------------------
கூரையாகுமா..?
குடிசைக்கு...
வாழை இலை..?
-------------------------
குதிரை போல் ஓடுமோ...?
ஆயிரம் காலிருந்தும்..
மரவட்டை...!
------------------------------
சுவைக்குமோ...?
பனிக்கட்டி...பதமாக..
படர்பனியாய் உறைபனி..!
------------------------------ -------------
வீட்டுக்குதவுமா...?
நடுக்காட்டில் விளைந்த
பலாப் பழங்கள்..!
------------------------------ ---------------
யாருக்கு உதவும்..?
இடுகாட்டில் வளர்ந்த
பனை மரங்கள்..!
------------------------------ ------------------
உத்திரத்திற்கு உதவுமோ ?
நிமிர்ந்து வளர்ந்தாலும்...
நெட்டிலிங்கம்..!
------------------------------ ------------
துடிப்பற்ற தூண்சிற்பமோ..?
யாருக்கும்....உதவாத..
செல்வந்தனின்.. செல்வம்..!
------------------------------ ---------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக