வாழ்க்கை வண்டியின்
ஓடும் சக்கரம்
காதல்..
வாய் திறந்த சிப்பிக்குள்
வந்து விழும் நீர் துளி
காதல்..
ஊமையின்
குரல்
காதல்..
ஏழேழு ஜென்மத்தையும்
இணைத்துவிடும்
காதல்..
பூர்வ ஜென்மத்தை
உணர்த்திவிடும்
காதல்...!
நிறங்கள்
காணாது
காதல்...!
குகை மனதுள்
கோடி தீபம்
காதல்..!
புத்தகங்கள்
தேடாது...
காதல்..!
அறிவை
ஆட்கொள்ளும்
காதல்..!
இருப்பதையும்
இல்லாததையும்
இணையாக்கிடும்..
காதல்.!
பிரிந்து சென்றாலும்
பிரிவதில்லைக்
காதல்..!
தொலைக்கும்
தேடும்..
கண்டெடுக்கும்
காதல்..!
இறைவன் விரித்த
மாயவலை..
காதல்..!
அறிவும்..
அறியாமையும்..
காதல்..!
இல்லாத இதயத்தை
நோய் கொண்டாட வைக்கும்
காதல்.!
பொருளும்..போகமும்
அறியாது
காதல்..
சித்திரம் (பொய்)
பேசும்
காதல்..!
விசித்திரப்
பேய்..
காதல்..!
ஔவியம்
காணாது
காதல்..!
நாணலாய்
மாறும்
காதல்..!
காற்றோடு
வைரஸ்
காதல்..!
தொட்டவுடன்
ஒட்டிக்கொள்ளும்
காதல்...!
கோபத்தைக்
கொன்றுபோடும்
காதல்..
எதிர்காற்றை
தூசியாக்கும்
காதல்..
மனதை
கண்ணாடியாக்கும்
காதல்..!
ஆரம்பமும்
முடிவுமற்றது
காதல்..!
இறப்பில்லை
கொல்லப்படுவதில்லை..
காதல்..
ஒரே வாசல்
ஓர் உணர்வு..
காதல்..!
ஆன்ம ஞானத்தை
மாயத்திரையிட்டு
மறைத்திடும்
காதல்..!
பஞ்சிகரணத்தை
இணைக்கும்
காதல்...!
நெல்லோடு...
உமியிது
காதல்..!
அஞ்ஞானம்
விஞ்ஞானம்
அறியாது
காதல்..!
அறியாமையின்
தோழன்
காதல்..
ஆத்மஞானியின்
பரம எதிரி
காதல்..!
சித்தம்
அடக்கும்
காதல்..!
உருவில்லாமல்
உருவம் அழித்திடும்
காதல்...!
ஞானக்கண்..
ஊனக்கண்..
வேறில்லை..
காதல்...!
இதயத்தின்
ஊக்கபானம்
காதல்..
உள்ளத்தின்
அருமருந்து
காதல்..
தள்ளியிருந்தாலும்
உள்ளிருந்து பார்க்கும்
காதல்..
சொல்லாததை
மனதால் தொட்டுணரும்
காதல்
அறிவை
பூட்டிவிடும்
காதல்
முகத்தில்
ஓவியம் தீட்டும்
காதல்
அறியாதவர்க்கு
தெரியாத நட்சத்திரம்
காதல்
இதயமே...
தேன்கூடு..!
காதல்...!
இயற்கையோடு
பேசும்
காதல் !
இசையோடு
சங்கமிக்கும்
காதல்..
உணர்வுகளை
குழந்தையாக்கிடும்
மாயாவி
காதல்...
கண்களில்
நிழலாய்க்
காதல்.
காலடியில்
சொர்க்கம்
காதல்...!
புதிதாய்
பிறவி...
காதல்...!
தனி உலகம்...
இரு(இரு)-தய சங்கமம்
காதல்...!
வெட்டவெளியில்
இரட்டைப் பறவை..
காதல்..!
நுழைந்ததும்
குருடாக்கும்
காதல்....!
உலகத்தை
பந்தாய் தூர வீசும்
காதல்...!
கண் நுழைந்தால்
நிஜமில்லை
காதல்...!
சிந்தையைத்
துளைப்பது
காதல்..!
அண்டத்தின்
அச்சாணி
காதல்..!
இதயத்தின்
துடிப்பு
காதல்..!
உள்ளிருந்தாலும்
உரக்கப் பேசும்
காதல்..!
மதத்தையும்
மிதிதிடும்
காதல்..!
புல்லையும்
புல்லாங்குழலாக்கிடும்
காதல்..!
இரும்பை தீயின்றி
மெழுகாய் உருக்கிடும்
காதல்..!
மருந்திடாமல்
மயங்கடிக்கும்
காதல்..!
வெற்றுப் பேனாவிலும்
கவி எழுதிடும்
காதல்..!
காலத்தை
கடந்தும் பேசும்
காதல்..!
காமதேனுவின்
அற்புத மடி
காதல்..!
உயிரோடு
கொன்றுவிடும்
காதல்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக