ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

ராக மாலிகா....


ஆரோகணமாய் நின் மோகனங்கள்..
அவரோகணத்தில் . இறங்கி வந்து..
கைகுலுக்கி அழைத்ததே பூபாளம்..!


பல்லவி இல்லாத பாசுரங்கள்...முகாரியில் 
மயங்கிச் சிதறாமல் சரணமாய் 
தொடுத்தாய்..ஆனந்தம்...


மாயனுன் குழலின் கீதம் மோகனம்...
மீராவின் மனம் ஏந்தும் ஆனந்த பைரவி..!
தம்பூரா அழைக்குமோ தோடியில்....
ஓடிவா நொடியில். ஏந்துவாய்..கல்யாணி..


மத்தளங்கள் கொட்ட.வரி சங்கம் நின்றூத .
நாச்சியார் திருமொழி காம்போஜியைக் களவாட..
மதுசூதன் நீ இங்கு வரவேண்டும்..ஹிந்தோளமாய்
வேண்டுவன ..பொழியவே அமிர்தவர்ஷிணி..!


ஆண்டாளின் கண்ணனும் மீராவின் கண்ணனும்
மயங்கிய கீதங்கள் கௌரிமனோஹரி !.
பதினாறு ராகங்கள் சுகமான கீதங்கள்..
கண்ணனே..நின் செவியில் விழவில்லையோ..?

மறைந்து விட்டாள் ஆண்டாள் காலடியில்...
கரைந்து விட்டாள் மீரா....காமவர்த்தினியாய்...
கீரவாணி தொட்டு ஸ்ரீரஞ்சனியில் தவழ்ந்து..
மலைய மாருதமாய் கதறுகிறேன்...!


கார்மேகனே....தர்பாராய் நில்லாதே..!
வசந்தாவாய்...இறங்கி வா... குறிஞ்சியில்..
சரஸ்வதியாய் காத்திருக்கும் இவளும்..
மீராவும்...ஆண்டாளும் ஒன்றென..
நீலாம்பரியில் இதமாய்...இணைத்திடு..!


==========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக