ஆடையுள் ஒளியும் நட்சத்திரங்கள்
இலவு காத்த கிளியாய் காத்திருக்க..
நோயில் பாதி பாயில் பாதியாய்..
வீழ்ந்த பெற்றவர்கள்..சொல்லாமல்..!
உயிர் உகுத்து உலகம் உகுக்க..
அனாதையாக அடுத்த பட்டம்..
ஒன்றுமில்லாத ஓட்டு வீட்டில்
வறுமையை மகளுக்கு சொத்தாய்..!
உயிலாக விட்டுச் சென்ற குபேரர்கள்..!
குடிசைக்குள் குடியிருந்தாலும்..
கோபுர மனம் எனக்குள்..!
குழப்பத்தில் கொந்தளிக்கும்...!.
தூண்டில் புழுவாக..!
மூங்கில் காட்டு முத்தாக,,
கசங்கிய காகிதமாய். ஓரமாக..!
தனிமையில்...தனி மயில்...!
அவன் கண்டெடுக்கும் நாளுக்காக..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக