புதன், 11 ஏப்ரல், 2012

காத்திருக்கும்....காலங்கள்...!

நிலம்...அள்ளி தருகிறது
நீர்..பாய்ந்து தருகிறது
காற்று...வாரித் தருகிறது
ஆகாயம்....பொழிந்து தருகிறது
நெருப்பு...கொத்திதுத் தருகிறது...
எதையுமே..எதிர்பாராமல்...!
அங்ஙனமே.......காத்திருக்கிறது....!
கொடுத்ததை...வாரிக்கொள்ள..!

------------------------------------------
தலைமுறை தாண்டி...
பரணிலிருந்த பழைய
பெட்டிக்குள்ளிருந்து
எட்டிப் பார்த்தது...
செல்லரித்த புத்தகங்கள்....
முப்பாட்டனார் சேர்த்தது...!
தயக்க மனதோடு....தடுமாறி
எடுத்தேன்...எழுத்துக்கள்
மெல்ல...இடம்பெயர்ந்தன...
இதயத்துக்குள்..! அவரது
கடல் போன்ற சொத்துக்கள்
யாவும்...இந்தப்பெட்டிக்குள்
புதைத்துப் போனது போல்....
புதையலாய்...மீண்டும்..!
மனம் தாவியது....
எப்படி காப்பதென்று..?!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக