வெள்ளி, 11 மே, 2012

கணிணிக்கு கண்ணாயிரம்...!



செல்ல மகளாய்..
கண்ணாடிப் 
பேழைக்குள் காலடி எடுத்து வைக்க..
தொலைகாட்சி... தனியானது..
கணிணியே...கண்ணானனது...!
உலகைச் சுற்றிப்பார்க்க வந்த 
இணைய விருந்தாளியாய் .. 
நான்.அன்று...!
இணையவளை...இனியவளாக்கி....
எனைச் சுற்றும் உலகமின்று...!

இணையப்  படிப்பு எதற்கு...?
என் இதயம் படிப்பதற்கு.....!
ஏழ் கடலை எனக்குள்ளே
ஏந்தி.. அலையும் மின்னலை நான்..!

எட்டுத் திக்கும் ..எட்டிப் பிடித்து....
எட்டாத இதயமும்..தொட்டிழுத்து...!
அறிந்தவர்  என்னுள்
இணைந்து விட்டார் ....

ஜாதி மதமும் இல்லை....

கருப்பு சிவப்பு  பேதம் இல்லை....
அவன் அவள் எதுவும் இல்லை....
ஆண்டான்  இல்லை.... 
அடிமையும் இல்லை....!
வெற்றுக் காகிதமாய்...உலாவினேன்...
எத்தனை கதைகள்..எத்தனை சுமைகள்...
அத்தனை நெஞ்சமும்..என்னுள்
எழுதி அமைதியாகும் போது..... 
சுமந்தும்...சிரிக்கும் தாயானேன்...!

குழுமங்கள் இணைந்து கும்மிக் கொட்டி...
வலைப்பூக்களில் என்னை கோர்த்துவிட்டு
இனியவள் என்னை விலகிடுவீரோ...
வியப்புடன் என்னுள்...அமிழ்ந்திடுவீரோ...!

என்னை மீறும்....இன்னொரு பிறப்பும்....
இல்லாதிருக்க இறைஞ்சிடுவீரோ...!
கன்னியென் னுள்ளேக் கண்களைப் பதித்து..
இதயம் என்னில் தொலைத்திடுவீரோ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக