வியாழன், 10 மே, 2012

மீராவின் கண்ணன்...!

 
 
கோடி முறை கூவும் மனம்.....
கண்ணா உன்னையே..
இமைபோழுதில்  என் 
களவாடின மனதோடு நீ 
என் செய்கிறாய் ..?

கோதைக்கு உன் மாலை 
வரவில்லையே...!
கூப்பிட்ட குரலுக்கும் 
பதிலில்லையே ..!
புல்லாங்குழல் ஏனோ 
தவிக்கின்றது..உன்
பொன்னான இசை 
கேட்கத் துடிக்கின்றது....!

பூம்புனலாய் நிறைந்தாய்...!
என் மார்பிலே..
சிந்திய முத்துக்கள் 
கண்ணீரிலே...
என் துணை நீ இங்கு 
யார் ஏற்பது?
நானன்றி யார்
உன்னில் எதிர்பார்ப்பது...?

பிருந்தாவன இதயம் 
எனைத் தாங்குமா?
நம் ஸ்ரிங்கார 
ரசங்களில் கண் மூடுமா..
ரீங்கார இன்பங்கள் 
நமை சூழுமா....?
அந்த கீதத்திலே 
மனங்கள் ஒன்றாகுமா..?

கண்ணனே உன்னைக்
காணத்  தவிகின்றேனே...
இந்த ஜென்மத்தில் 
நடக்காது அறிகின்றேனே..
உயிர் கலந்த உறவென்று 
நாம் சொன்னது....இன்று
உடல் மாறி உயிர் தானே..... 
வாழ்கின்றது...!

எங்கிருந்தும் என்னை 
நீ காணலாம்..அங்கே...
கீதையைப் போல் 
உந்தன் மொழி கேட்கலாம்...
என் நெஞ்சின்  கோபுரமாய் 
நீ மாற வா....இந்தப் 
பிரபஞ்சத்தை ஏமாற்றும் 
வகை  கூறவா....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக