உறங்காமல் இருப்பேனா...
உன்னை எண்ணாமல் இருப்பேனோ .?
என் இணுவை விநாயகனே...
எல்லை..... கடந்து வந்தும் .....
என் எண்ணம்.. களையவில்லை
தொல்லைகள் வந்த போதும்
உன்னை துதி பாட மறக்கவில்லை..
(உண்ணாமல் இருப்பேனா உறங்காமல் இருப்பேனா உன்னை எண்ணாமல் இருப்பேனோ என் இணுவை விநாயகனே..)
கண்ணா செந்தமிழ் மணக்கும்
தனித்துயர்ந்து கலை கொழிக்கும்
பண்பாளர் பாட்டிசைக்கும்....
பாவலர்கள் வாழ் இணுவை....
மண்ணாளும் மூத்தவனே
மங்கலத்து நாயகனே.....
அண்ணா அழகன் முருகன்
அண்ணா அருட்கனியே...
(உண்ணாமல் இருப்பேனா உறங்காமல் இருப்பேனா உன்னை எண்ணாமல் இருப்பேனோ என் இணுவை விநாயகனே..)
பன்னிருநாள் விழா எடுத்து
பக்தர் குழாம் குதூகலிக்க ....
பன்னீர்..... மழையினியே
பக்குவமாய் நனைந்திடவே...
வண்ணமிகு தேரேறி
வளம் வந்து நலம் செய்யும்...
மின்னோர் குறை தீர்த்த
இத்தகனே விநாயகனே....
(உண்ணாமல் இருப்பேனா உறங்காமல் இருப்பேனா உன்னை எண்ணாமல் இருப்பேனோ என் இணுவை விநாயகனே..)
எங்கள்குல விடிவிளக்கே
எழில் மணியே கணபதயே
பொங்கும் பெரு வயிற்றோனே...
பொற் கொடியே ரத்தினமே
சங்கடத்தை சங்கரித்து
சந்ததத்தை எமைக்காக்க
தங்கிடுவாய் என் குலத்தில்
தவக்கொடியே.... தயா... நிதியே...
(உண்ணாமல் இருப்பேனா உறங்காமல் இருப்பேனா உன்னை எண்ணாமல் இருப்பேனோ என் இணுவை விநாயகனே..)
============================== ==============
இந்த அருமையான பாடலை கேட்கும் வாய்ப்பு எனக்கு இன்று கிட்டியது...
உங்களுக்கும் என்றாவது கேட்கும் வாய்ப்பு கிட்ட வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக