சுகத்திலே திளைத்து..
உலகத்தை மிதித்து
ஊஞ்சலாடிய மனதுள்
நீயில்லை...கவியில்லை...!
புண்ணாகிய உடலுள்...
பொல்லாங்கு போனதும்
வேண்டாத உயிராய்..
பொல்லாத உடலாய்..
கரைத்து காற்றாக்க
விரைந்து வீழ....ஏந்தினாய்
தாங்கினாய்....பிறவிப்
பயன் சொன்னாய்....!
உந்தன் கடைக்கண்
பார்வையில் மனதுள்
வேல் பாய்ந்து....
குனிந்த தலையில்
குட்டி பின்பு கட்டிப்
போட்டாய் கருணைக்கடலுள்...!
அருணகிரிக்கு ஞானமளித்து
நினதருட் கவியாக்கிய
சுப்ரமணிய முருகா.!
அவர்தம் சிந்தையில்
அன்றே ஒன்றானாய்....
மோனத்தில் மௌனமாய்
அருணைக்கு....கிரிவலம்
வந்தவரை ஆட்கொண்டு...
உலகிற்கு முத்துக்கள்
பல தந்த மாணிக்கமாய்..நீ..!
நாதரின் தவங்கள் யாவும்
நாதமாய் உனைச் சேர
ஆசிகள் வழங்கி
சிறகு வைத்து அனுப்பிய
சிங்கார வேலா...!
நித்தம் கிரிவலம்
வரும் பச்சைக் கிளியாக
அருணையில் பறக்க
விட்டாய் அருணரை...!
சிவஞானபாலா..!
கல்லார் எவருமிலர்...
பொல்லார் எவருமிலர்...
உன் கண்ணடி பட்ட பின்னே..
கவியாகும் கல் மனமே...!
உந்தன் அரண் இருக்க
உனது வேல் காக்குமே
எந்தன் ஆன்ம வேலுக்கேது
பயம்...நீயிருக்க....?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக