வெள்ளம் அடித்துச் செல்ல
ஆற்றில்
தள்ளி விடப்பட்டு
எரியும்
குத்து விளக்கு !
தனித்து விடப் பட்ட
மணிப் புறா !
சுதந்திரப் புறா அல்ல !
வதங்கிய கூண்டில்
சிக்கிக் கொண்ட
சிறகொடிந்து போன
சித்திரச் சிலை !
முத்திரை இழந்து
சித்திர வதைக் குள்ளான
பக்திக் குயில் !
தன்னிணையைத் தேடி அலைந்து
நாடு விட்டு நாடு சென்று
கூடு விட்டுக் கூடு பாய்ந்து
முடிவில்
என் தோளில் வந்தமர்ந்த
பொன்குயில் !
"என்னவன்" என்றென்னை
உரிமையாய்
ஒட்டிக் கொண்டு
இதயத்தில்
கூடு கட்டிக் குடியிருக்கும்
ஜோடிப் புறா !
இணையைத்
தன்னவன் ஆக்கி என்னைச்
சிறையிட்ட
சிற்பச் சிலை !
மனத்துக்கு இனிய வளாய்
உளத்தில் நிறைபவள்
ஒளிந்திருந்து விழித்திருந்து
எனக்கு
ஒளி யூட்டும்
பாவை விளக்கு !
கோயில் விளக்கு !
குத்து விளக்கு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக