உயர்ந்து நிலைத்த இமயம்...
கம்பீரத்தில்.... மயங்கும்
கங்கையும்....யமுனையும்...!
அணைத்து சுழற்றி
கரை புரளும் கங்கை நித்தம்....!
தொலைவில் நின்று ஏங்கும்
யமுனை...உயரத் துடிக்கும்...!
நின்று உயர் தரிசனம் தரும்..
உமையவன் முகம் கண்டு
மனம்... பொங்கும் கடலாகும்..!
ஆசைக் கண்ணன் அவன்...
மங்கல நதி இரண்டைத்
தாங்கும் ஊஞ்சல் பாலமாய்...
ராம...லட்சுமணன் ..போல்...
அன்புச் சங்கிலி பாலமாய் பிணைக்க...
ரிஷிகேஷத்தில் புண்ணியமாய்
ஒரு ஆனந்த தரிசனம்...!
காலடியில் காதலோடு
நதிகள் சங்கமிக்க....!
கூழாங்கல் மலர் தூவி...
இமையம் விளையாடும்..!
பாதாள அலகாபாத்தில்..!
============================== ====
ஜெயஸ்ரீ ஷங்கர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக