வியாழன், 7 ஜூன், 2012

ஊமைக்கல்


கல்லடி பட்டது  பழம்...
பழமும் விழுந்தது...
கல்லும் விழுந்தது...
மரம் இழந்த பழம்..
கல் என்ன சொல்லும்...?

கல்லடி  பட்டது மரம்..
கல்லால் அடித்ததால்
கல் மட்டும் விழுந்தது..
மரம் பட்ட காயம்...
கல் என்ன சொல்லும்..?

மரம் தாண்டி பட்டது
வீட்டு ஜன்னல்..
அலறி கொண்டு
நொறுங்கியது கண்ணாடி...
 கண்ணாடிக்குக் காயம்....
கல் என்ன சொல்லும்..?

ஊமைக்கல் வருகிறது...
ஒதுங்கிச்  செல்லுங்கள்....!
=============================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக